பொறியியல் படிப்புக்கு ஏற்கனவே இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் நேற்று முதல் மூன்றாவது கட்ட கலந்தாய்வு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கலந்தாய்வு செப்டம்பர் 3ஆம் தேதி உடன் நிறைவு பெற உள்ளது என்றும் அதன் பின் காலியிடங்கள் இருந்தால் துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சுமார் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
பொறியியல் படிப்புக்கு முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி, இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியும் தொடங்கியது. இந்த இரண்டு கலந்தாய்வுகளில் 56 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன.
இந்த நிலையில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில் 89 ஆயிரத்து 694 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி உடன் இந்த கலந்தாய்வு நடைபெறுவதால் அதன் பின்னும் காலியிடங்கள் இருந்தால் துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.