சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரம்.. 18 மாணவர்கள் கூண்டோடு நீக்கம்..!
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:40 IST)
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கடமையாக விமர்சனம் செய்தனர்
இந்த நிலையில் சென்னை தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 18 மாணவர்கள் கூண்டோடு கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது