என்ஜினியரிங் படித்தவர்களும் இனி ”டெட்” எழுதலாம்..

Arun Prasath
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (13:17 IST)
பொறியியல் படித்தவர்களும் இனி ஆசிரியர் தகுதி தேர்சு எழுதலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பி.எட். கல்லூரிகளில் 20% என்ஜினியர் மாணவர்களுக்காக சீட் ஒதுக்கப்பட்டது. அதன் பின்பு காலப்போக்கில் பொறியியல் மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

மேலும் பொறியியல் படித்தவர்கள் தற்போது சம்பந்தப்பட்ட துறைகளை விட மற்ற துறைகளிலேயே அதிகளவில் பணிக்கு செல்கின்றனர். பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பொறியியல் பட்டப்படிப்பில் எந்த பிரிவில் பயின்றிருந்தாலும்  இனி ”டெட்” எனும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதலாம் எனவும், அதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான கணித ஆசிரியராகலாம் எனவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்