ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்களா?

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (16:21 IST)
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் அவர்கள் பேசும்போது வருங்காலத்தில் ஆன்லைனில் தான் தேர்வு உள்பட அனைத்தும் நடைபெறும் என்றும், ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாத மாணவர்களாக கருதப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் ஆன்லைனில் விண்ணபிக்க முடியாத மாணவர்களை உருவாக்கும் அரசு நிர்வாகமும் ஆளும் தகுதியற்றது என்று அவர் கூறினார்.

மேலும்  வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், 45-50 நாட்களுக்குள் ஒரு செமஸ்டர் தேர்வை நடத்துவதால் மாணவர்களின் நேரம் விரையமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் பேசியுள்ளார்


 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்