நெல்லையில் நடைபெற்ற மாதா கோவில் விழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பரதர் உவரியில் ஒரு மாதா கோவில் உள்ளது. அங்கு தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று காலை சப்பர பவனி வலம் வந்தது.
அந்த சப்பரத்தை 20 பேருக்கும் மேலானோர் இழுத்து சென்றனர். அப்போது தாழ்வாக தொங்கிய மின்கம்பி மீது சப்பரம் மோதியது. இதில், சப்பரத்தை இழுத்து சென்ற 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.