'இரட்டை இலை' சின்னம் யாருக்கு: இன்று முடிவு செய்கிறது தேர்தல் ஆணையம்

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (07:26 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து வந்தது





இந்த நிலையில் விசாரணைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் இன்று யாருக்கு இரட்டை இலை என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை இலை கிடைக்கும் அணிக்கே தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்பதால் இரு அணிகளும் இந்த சின்னத்தை பெற கடுமையாக வாதம் செய்தன

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். மற்றும் தினகரன் அணியினர் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்ததை அடுத்து, ஏழு முறை இருதரப்பையும் அழைத்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்