ஈபிஎஸ்-ஓபிஎஸ் கைதா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி

ஞாயிறு, 19 நவம்பர் 2017 (23:30 IST)
ஒருபக்கம் சசிகலா உறவினர்கள் குறிவைக்கப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் வரை வருமான வரித்துறையினர் புகுந்து சோதனை செய்து அரசியல்வாதிகளுக்கு கிலியை கொடுத்து வருகின்றனர்.


 


இன்னொரு பக்கம் கவர்னர், ஆய்வு என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் அவருக்கென ஒரு அறையும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி மிக  வேகமாக பரவி வருகிறது.

அதுஎன்னவெனில் எடப்பாடி அரசு வரும் 22 அல்லது 23ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப்படவுள்ளதாகவும், அதனையடுத்து தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமுலுக்கு வர இருப்பதாகவும், அதுமட்டுமின்று முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர்  ஓ.பி.எஸ் உட்பட 23 மந்திரிகள் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரை கவர்னர் ஆட்சி அதன் பின்னர் பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்