வினாத்தாள் கசிந்ததற்கு காரணம் 2 தனியார் பள்ளிகள் தான்: பள்ளிக்கல்வித்துறை

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (07:45 IST)
திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததற்கு இரண்டு தனியார் பள்ளிகளே காரணம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
நேற்று முதல் தமிழகத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடங்கியது
 
ஆனால் திருப்புதல் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது
 
இந்த விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து தான் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
வினாத்தாள் கசிந்த  முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகள் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்