நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையை கணக்கிடவும், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கவும் கோவின் இணையதளம் செயல்பட்டு வருகிறது. செல்போன் எண், ஆதார் தகவல்கள் இதில் பதிவேற்றப்படுகின்றன. இந்நிலையில் கோவின் இணையதளத்தில் உள்ள பயனாளர்கள் தகவல்கள் கசிந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, கோவின் தளத்திலிருந்து எந்த தகவல்களும் கசியவில்லை என்றும், கோவின் தளம் மிகவும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக ஒரு செல்போன் எண்ணில் 4 பேர் வரை பதிவு செய்துகொள்ள அனுமதி இருந்த நிலையில் தற்போது 6 பேர் வரை பதிவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.