முஸ்லீம் ஜமாத் பாஜகவின் கைப்பாவை! விஜய் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்! - முஸ்லீம் லீக் முஸ்தபா விளக்கம்!

Prasanth Karthick

வியாழன், 17 ஏப்ரல் 2025 (09:25 IST)

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமீபத்தில் இஸ்லாமியர்களின் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டதுடன், வக்பு வாரிய சட்டத்திருத்தம் ஆகியவற்றில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் இஸ்லாமிய மக்களுக்கு ஃபத்வா வெளியிட்ட அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி, இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும், படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த விஜய், இஃப்தார் நோன்புக்கு குடிக்காரர்களை அழைத்து வந்து மாண்பை அவமதித்து விட்டதாகவும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இந்த ஃபத்வாவுக்கு எதிராக தமிழ்நாடு முஸ்லீம் லீகை சேர்ந்த வி.எம்.எஸ். முஸ்தபா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “இஸ்லாமிய மக்களின் நண்பனாக விஜய் செயல்பட்டு வருகிறார். வக்பு வாரிய சட்டம் குறித்து கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இஸ்லாமிய மக்கள் பக்கம் நிற்கிறார். விஜய் மீது குற்றம் சாட்டும் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பு நீண்ட காலமாக பாஜக கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் பல்வேறு பிரிவுகளில் இதுவும் ஒன்று. பாஜகவின் அகண்ட பாரத கொள்கையை நாடெங்கும் இஸ்லாமியர்கள் எதிர்த்தபோது, அதை ஆதரித்தவர் சகாபுதீன் ரஸ்வி. மத்திய அரசின் வக்பு சட்டத்தை ஆதரித்தவரும் சகாபுதீன் ரஸ்விதான். இஸ்லாமியர்கள் உரிமைகளுக்காக தவெக போராடுகிறது. அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற லெட்டர் பேட் அமைப்புகள் சங் பரிவாரால் தூண்டிவிடப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்