தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ளலாம்: பள்ளிக்கல்வி இயக்குனர் அனுமதி..!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (08:32 IST)
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் உள்ள காலிப்பணியிடங்கள், பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்புத் தலைமையாசிரியராக பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதிலியாக, பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக  பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
 
மேலும் கடந்த ஆண்டு மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஒருவேளை சென்ற ஆண்டை விட கூடுதலாக நியமனம் செய்யப்படும் தேவை இருப்பின் எவ்வளவு தேவை என்பதை கடிதம் வாயிலாக தெரிவித்து பின்னர் நியமனம் செய்து கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
 தற்காலிக ஆசிரியராக நியமனம் செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் 12,000, 15,0000 மற்றும் 18,000 என வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்