போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு

புதன், 31 மே 2023 (19:29 IST)
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு   தனியார் நிறுவனங்கள் மூலம்  குத்தகை முறையில்  ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள்  நேற்று முன்தினம்  திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை தேர்வு செய்யும் முடிவுக்கு எதிரிப்பு வலுத்துள்ளதால், போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஜூன் 9 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளளது.

இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்திய ராஜன், ‘’போக்குவரத்துறையில் வெளி ஏஜென்சி ஊழியர்களை எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக உறுதியளித்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 9 ஆம் தேதி தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்