நடிகர் அஜித் நலம் பெற எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Sinoj
வெள்ளி, 8 மார்ச் 2024 (17:09 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது  மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடக்கவுள்ளது.
 
இதற்காக நடிகர் அஜித்குமார் தயாராகி வந்த நிலையில், நேற்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
சில நாட்களுக்கு முன் தன் மகன் ஆத்விக் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், நடிகர் அஜித்திற்கு, காதுக்கும் மூளைக்கும்  இடையே நரம்பில் சிறிய கட்டி ( வீக்கம்) இருப்பது கண்டறியப்பட்டது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.  அஜித் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அஜித் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவித்தது.
இந்த நிலையில்,எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அஜித் நலம்பெற வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்