டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

Siva

வெள்ளி, 25 ஜூலை 2025 (07:53 IST)
வாரணாசியில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான ஒரு நபர், மருத்துவரை மிரட்டி நிர்வாண புகைப்படங்கள் எடுத்து, அதன் மூலம் ரூ. 8 லட்சம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வாரணாசியை சேர்ந்த ஒரு டாக்டர், Grindr டேட்டிங் செயலி மூலம் ஒரு நபருடன் தொடர்பில் வந்துள்ளார். சில மெசேஜ் பரிமாற்றங்களுக்கு பிறகு, அந்த நபர் தன்னை விகாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில், ஒருநாள் ஹோட்டல் ஒன்றில் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.
 
சந்திப்புக்கு முன்னதாக, விகாஸ் தன்னை நேரில் சந்திக்க வரும்போது ஆணுறை கொண்டு வருமாறு டாக்டரிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, டாக்டர் ஆணுரையுடன் ஹோட்டலுக்கு சென்றபோது, நிலைமை மாறியது. விகாஸ் டாக்டரை அடித்து மிரட்டி, அவரது ஆடைகளை களைய வைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
 
"நான் கேட்கும் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், இந்த நிர்வாண புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டு விடுவேன்" என்று மிரட்டியதால், டாக்டர் தனது அஞ்சி, தனது வங்கி கணக்கிலிருந்து உடனடியாக ரூ. 8 லட்சம் பணத்தை விகாஸுக்கு அனுப்பியுள்ளார்.
 
பணம் பறித்த பிறகு, விகாஸ் டாக்டரை மிரட்டி அனுப்பியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்ட டாக்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், மிரட்டி பணம் பறித்தல், மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
குற்றம் சாட்டப்பட்ட நபரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவரை தீவிரமாகத் தேடி வருவதாகவும், விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் டேட்டிங் செயலிகள் மூலம் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்