எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திருப்பதியில் சாமி வந்து ஆடிய பூசாரி

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (07:34 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தனது குடும்பத்தினர்களுடன் திருப்பதி ஏழுமலையான் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை அவர் தனது குடும்பத்தினர்களுடன் அட்சபாத தரிசனத்தில் கலந்துகொண்டு ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்
 
இந்த நிலையில் வராஹசாமி கோவிலில் சாமி தரிசனம் முடித்த முதல்வர், அருகில் இருந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தபோது அங்கிருந்த பூசாரி ஒருவருக்கு திடீரென சாமி வந்தது. அவர் எடப்பாடியே என்னை வந்து பார் என்று சத்தம் போட்டு கத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து அவரை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கி சென்று விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர். இதன்பின்னர் பேட்டி அளித்த ஸ்ரீராமுலு என்ற அந்த ஸ்ரீவில்லிபுத்துர் பூசாரி, 'தமிழகத்தை சீரழித்துவிட்ட எடப்பாடி தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று பகவான் கூறியதாக கூறினார்.
 
முதல்வர் திருப்பதிக்கு சென்றபோது அவருக்கு எதிராக பூசாரி ஒருவர் சாமியாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்