மாதம் ஒருமுறை மின்கட்டண வாக்குறுதி என்னவானது? எடப்பாடி பழனிசாமி கேள்வி

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (13:05 IST)
மாதம் ஒருமுறை மின்கட்டண வாக்குறுதி என்ன ஆனது என்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். 
 
திமுக கடந்து தனது தேர்தல் அறிக்கையில் மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார் 
 
மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடுவோம் என்று திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கோடை காலத்தில் மின்வெட்டால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை இடுகின்றனர்.
 
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் புரியவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்