மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:50 IST)
சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 4-வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் ரூ.910 கோடி முறைகேடாக வருவாய் ஈட்டியதாகவும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை, கோவையில் மார்ட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அக்டோபர் 12 முதல் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் உட்பட பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும்,  முழுமையாக சோதனை முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்