10,11,12ஆம் வகுப்புகளுக்கு அலகு தேர்வு.. தேதியை அறிவித்த கல்வி அலுவலர்..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:44 IST)
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் அலகுத் தேர்வு தேதியை சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.மார்ஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து விதமான பள்ளிகளிலும் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ம் அலகுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அலகுத் தேர்வு நவம்பர் 3 முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான கால அட்டவணை தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் செயல்பட வேண்டும்.

மேலும், இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பின்னர் மாணவர்களுக்கு தீபாவளி விடுமுறை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்