டிஸ்சார்ஜ் ஆன துரை தயாநிதி அமெரிக்கா செல்ல ஏற்பாடு.. உயர் சிகிச்சை அளிக்க முடிவா?

Siva
புதன், 25 செப்டம்பர் 2024 (07:41 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மகன் துரை தயாநிதி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அங்கு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சகோதரர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகன் துரை தயாநிதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் உடனிருந்து கவனித்துக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்று துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் துரை தயாநிதி குணம் அடைந்தாலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரது குடும்பத்தினருக்கு திருப்தி இல்லை என்றும், எனவே தயாநிதியை அமெரிக்காவுக்கு விரைவில் அழைத்துச் சென்று உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

துரை தயாநிதிக்கு சிகிச்சை ஏற்பாடுகளை அமெரிக்காவில் இருக்கும் நடிகர் நெப்போலியன் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் விரைவில் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்