கோவில் வாசலில் கஞ்சா விற்ற போலிச்சாமியார்: 7 கிலோ பறிமுதல் செய்ததாக தகவல்!

புதன், 22 டிசம்பர் 2021 (17:59 IST)
கோவில் வாசலில் கஞ்சா விற்ற போலி சாமியாரை கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மயிலாப்பூர் கோவில் வாசலில் சாமியார் வேடம் போட்டு கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து அதிரடியாக காவல்துறையினர் மாறுவேடத்தில் மயிலாப்பூர் கோவிலை சுற்றி சோதனை செய்தனர்
 
அப்போது ஒரு சாமியார் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிலையில் அவரை சுற்றிவளைத்து அவரிடம் சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவருக்கு கஞ்சா சப்ளை செய்த இரண்டு பேரையும் கைது செய்தனர்
 
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மயிலாப்பூர் கோவில் வாசலில் சாமியார் வேடம் போட்டு கஞ்சா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்