ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு – திருச்சியில் நாளை விடுமுறை!

திங்கள், 13 டிசம்பர் 2021 (15:21 IST)
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடப்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொள்ள திருச்சி மட்டுமல்லாது சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்கள் பலவற்றில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளை நடைபெறும் நிலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. அதிகாலை 4.45 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில், இந்நிகழ்வை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்