சென்னையில் மாலை நேர மழை; பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (19:07 IST)
சென்னை கடந்த மூன்று நாளாக மாலை நேரங்களில் பெய்து வரும் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 
சென்னையில் கடந்த மூன்று நாளாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நகரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
 
சென்னை மாலை நேரங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். மாலை நேரங்களில் மழை பெய்ய தொடங்கியதால் போக்குவரத்து சற்று அதிகரித்துள்ளது. மழை பெய்து சாலை ஓரங்களில் நீர் தேங்குவதால் நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்