சூறைக்காற்றால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் தவித்த ரயில்

Webdunia
புதன், 17 மே 2017 (15:24 IST)
ராமேஸ்வரம் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசியதால் பாம்பன் பலத்தை கடக்க முடியாமல் சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் தத்தளித்தது.


 

 
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் புறப்பட்டது. அப்போது பாம்பன் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசியது. இதனால் பாம்பன் பாலத்தில் ரயிலை செலுத்த ஓட்டுநர்கள் தயங்கினர். 
 
இதையடுத்து பாம்பன் பாலத்தின் தொடக்கத்திலே ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் சூறைக்காற்று சீற்றம் தனித்த பின் ரயில் பாலத்தை ஆமை போல் கடந்தது. 
 
இதனால் ரயில் பயணிகள் அச்சத்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பாம்பன் பாலத்தை ரயில் எந்த பாதிப்பும் இல்லாமல் கடந்தது. மேலும் 1969 ஆம் ஆண்டு புயல் காற்றில் சிக்கி ராமேஸ்வரம் ரயில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமான பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்