தூங்கா நகரில் தலைவிரித்தாடும் குட்கா சப்ளை? போலீஸார் அதிரடி ரைட்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (14:17 IST)
மதுரையில் குட்கா விற்பனை அதிகரித்துள்ளதாகவும் குடோன்களில் பதுக்கி  வைத்திருப்பதாகவும் தகவல். 
 
மதுரை நகர் பகுதிகளில் குட்கா விற்பனை அதிகரித்துள்ளதாகவும் குடோன்களில் பதுக்கி  வைத்திருப்பதாகவும் காவல்துறை ஆணையருக்கு வந்த தகவலையடுத்து மதுரை நகர் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 
 
அந்த வகையில்  மதுரை தெற்கு வாசல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட தெற்கு மாசி வீதி, நவபத்கானா தெருவில் ஒரு வீட்டில் புகையிலை குட்கா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தெற்கு வாசல் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். 
 
சோதனையில் விமல் குட்கா, கணேஷ் புகையிலை, கூல் லிப்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 56 மூட்டைகள் மற்றும் 7 அட்டை பெட்டிகள் என மொத்தம் 587 கிலோ கிராம் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை முழுவதும் கைப்பற்றிய காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்