சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை: காவல்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (18:48 IST)
சென்னையில் மூன்று நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. 
 
ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதை அடுத்து மூன்று நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 
நாளை அதாவது ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய மூன்று நாட்கள் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லை பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை என்றும், மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்