பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டு போட சென்ற டிரைவர்: பொறுமை காத்த பயணிகள்!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (18:01 IST)
தர்மபுரியில் தனியார் பேருந்து டிரைவர் ஒருவர் பேருந்தை நிறுத்திவிட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வாக்களிக்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தர்மபுரியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது திடீரென பேருந்தை நிறுத்தினார். பயணிகள் அவரிடம் காரணம் காட்டியபோது கேட்டபோது தான் வாக்களிக்கும் மையம் இதுதான் என்றும், பயணிகள் அனுமதி அளித்தால் வாக்களித்துவிட்டு வந்துவிடுவேன் என்றும் கூறினார்,.
 
உடனே பயணிகளும் மகிழ்ச்சியுடன் அனுமதியளிக்க அந்த ஓட்டுனர் உடனே பேருந்தில் இருந்து இறங்கி வாக்களித்துவிட்டு மீண்டும் பேருந்தை இயக்கினார். பேருந்து ஓட்டும் நேரத்திலும் தவறாமல் வாக்களித்த ஓட்டுனருக்கும், அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்