கலகலக்கும் உள்ளாட்சி தேர்தல்! – காலையிலேயே வந்து ஓட்டு போட்ட பிரமுகர்கள்!

சனி, 19 பிப்ரவரி 2022 (09:19 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலையிலேயே பிரமுகர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சினிமா, அரசியல் பிரபலங்கள் காலையிலேயே சென்று வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி கிராப்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தில்லை நகரில் வாக்கினை செலுத்தினார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். முத்தூர் வாக்குசாவடியில் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் வாக்கு செலுத்தினார். மேலும் பல திரை மற்றும் அரசியல் பிரபலங்களும் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்