சுவர் விளம்பரத்திற்காக அடித்து கொள்ளும் கட்சிகள்: டாக்டர் ராம்தாஸ் கிண்டல்

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:31 IST)
சுவர் விளம்பரத்திற்காக அடித்துக் கொள்ளும் கட்சிகள் என பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதை அடுத்து சுவர் விளம்பரத்திற்காக சுவர்களை முன்பதிவு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன 
 
இந்த நிலையில் சென்னையில் சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து கருத்து கூறிய டாக்டர் ராம்தாஸ் கூறியதாவது: சென்னையில் சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக - பாஜக மோதல்: செய்தி -  நாடு, நாடு இது எங்கள் தமிழ்நாடு. பாரு, நீ பாரு.... கொரோனாவால் ஒட்டுமொத்த மாநிலமும் பாதிக்கப்பட்டு, போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சுவர் விளம்பரத்திற்காக அடித்துக் கொள்ளும் அவலத்தை நீ பாரு! என்று பதிவு செய்துள்ளார்.
 
மேலும் வேளாண் மசோதா குறித்து ராமதாஸ் கூறியதாவது: உழவர்கள் நலன் இம்மியளவும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால், அது உழவர்கள் தான். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை முழுமையாக செயல்படுத்துக  என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்