சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையை விட்டு வெளியேற மறுப்பு: மாநிலங்களவையில் பரபரப்பு!

திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:44 IST)
வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில மாநிலங்களவையில் நேற்று அமலியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு இன்று காலை சஸ்பெண்ட் செய்தார். இதனை அடுத்து அந்த எட்டு எம்பிக்களும் மாநிலங்களவையில் இன்று அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது 
 
ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களுக்கு ஆதரவாக எதிர்க் கட்சி எம்பிகளும் குரல் கொடுத்ததால் உறுப்பினர்களிடையே தொடர் அமளி ஏற்பட்டது 
 
மேலும் வேளாண் சட்டமசொதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் அமளி செய்தனர். இதனை அடுத்து நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார் இதனால் மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்