நான்கு நாட்களுக்கு முன்பு நான் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது இந்த மாவட்டத்தில் வன்னியர் இனத்திற்காக குரல் கொடுத்து பாடுபட்ட திரு ராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு கழக ஆட்சி வந்தவுடன் மணிமண்டபம் அமைப்போம் என்ற அந்த உறுதிமொழியை நான் தந்திருக்கின்றேன். மேலும் அதே உணர்வோடுதான் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஏஜி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஏ கோவிந்தசாமி அவர்களுக்கு ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும். காரணம் அவர்களும் இந்த தமிழ் சமுதாயத்திற்கு பாடுபட்டவர், பணியாற்றியவர் என்று பேசியிருக்கிறார்
முக ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப் போவதாக விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார். இராமசாமி படையாட்சியருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது.