கரூர் மாவட்டம் அ.தி.மு.க வின் கோட்டை - கோ.கலையரசன் சூளுரை

வெள்ளி, 11 அக்டோபர் 2019 (19:55 IST)
கரூர் மாவட்டம் அ.தி.மு.க வின் கோட்டை என்பதை நிருபிக்கும் நேரம் இது என்று அரவக்குறிச்சி கிழக்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் சூளுரைத்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி அ.தி.மு.க கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், மலைக்கோவிலூர் சங்கமம் மஹாலில், கொடையூர், நாகம்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் சிறப்புரையாற்றினார்.

கிழக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டமும், உள்ளாட்சி தேர்தலில் விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பேசிய அ.தி.மு.க வின் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன், இந்த பகுதியில் உள்ள அனைத்து கிளைகளிலும், வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை சேகரித்து, நமது கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான அண்ணன்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களிடம் கூறியுள்ளேன், அமைச்சரும், அத்யாவசிய தேவைகளை உணர்ந்து அவ்வப்போது பல்வேறு நல்லதிட்டங்களை செய்ததோடு, இந்த அரவக்குறிச்சி தொகுதிக்கு தத்துப்பிள்ளையாக இருந்து, அனைத்து நல்ல திட்டங்களையும் தீட்டினார். ஆனால் கடந்த முறை நடந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில், ஒட்டுகளை மக்கள் மாற்றி குத்தியுள்ளனர்.

இருப்பினும் நம் மக்கள் என்று இன்னும் ஏராளமான நலத்திட்டங்களை தீட்டி வருகின்றார். அவர் எப்போதும் நம் அமைச்சர் தான் அவரது தொகுதி தான் அரவக்குறிச்சி என்றும், நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து இந்திய அளவில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். இருப்பினும் நம் மக்களை ஏமாற்றி தி.மு.க காங்கிரஸ் கூட்டணி நய வஞ்சகம் செய்கின்றது.

அதற்கு நமது உள்ளாட்சி தேர்தலில் அந்த கூட்டணியினை வேர் எடுத்து வீட்டிற்கு அனுப்பி வைப்போம், கரூர் மாவட்டம் நமது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் கோட்டை என்பதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நிருபிக்க வேண்டுமென்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்