தமிழக அரசுக்கு சீன அதிபர் ஷி ஜிங்பிங் பாராட்டு...

சனி, 12 அக்டோபர் 2019 (14:05 IST)
இந்தியா - சீனா இடையேயான முறைசாரா சந்திப்புகள் தொடர சீன அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேசமயம் , இந்த இரு நாட்டு தலைவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடக்க பலத்த பாதுகாப்புகளுடன் சிறந்த முறையில் ஏற்பாடு செய்த  தமிழக அரசுக்கு சீன அதிபர் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று சென்னை வந்தார். சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் தங்கிய அவரை, இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.
 
அதன்பிறகு இருவரும் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்றனர்.அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, உள்ளிட்ட பகுதிகளைப் பார்த்தனர். பின்னர் இருநாடு உறவுகள் குறித்து இருவரும் பேசினர்.
 
இதனையடுத்து இந்தியாவின் பாரத நாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.இரவு உணவாக தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷிங் பிங் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. சீன அதிபர் ஷிங் ஜிங்பிங் சீனா தேசத்தின் அரசு விமானத்தில்  சீனவுக்குச் சென்றார்.
 
இதனையடுத்து,சென்னை மீனப்பாக்கம் விமான நிலையத்தில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவு செயளர் விஜய் கோகலே கூறியதாவது :

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து மோடியிடம் ஜிங்பிங் பேசவில்லை.இரு நாடுகள் இடையேயான ராஜதந்திர தொடர்புகளை மேலும் அதிகரிக்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
 
மேலும்,  வர்த்தக பற்றாக்குறையை விவாதிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும்; உற்பத்தித்துறையில் கூட்டுறவை மேம்படுத்த உயர்மட்டக்குழு ஆலோசிப்பார்கள்; குழுவில் சீன துணை அதிபர், இந்திய நிதியமைச்சர் இருப்பர் .
 
சீனாவில் உள்ள தமிழ் ஆலயங்களை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளதாக கூறினார்.
 
இந்த சந்திப்பில் சீனாவுக்கு ,பிரதமர் மோடியை வருமாறு ஜிங்பிங் அழைப்பு விடுத்துள்ளது குறிபிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்