இளம் பெண்கள் பேரவை: உதயநிதி எடுத்த அதிரடி முடிவு

ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (12:01 IST)
திமுக இளைஞரணியின் செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற நடிகரும் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியை புத்துணர்ச்சியுடன் கொண்டு செல்கிறார் என்று பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதயநிதியே நேரில் சென்று இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்ப்பது, இளைஞரணியின் சார்ப்பில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது, இளைஞரணி நிர்வாகிகளை மாற்றி இளம் ரத்தங்களுக்கு பதவி கொடுத்து வருவது ஆகியவை உதயநிதி மேற்கொண்ட பணிகள் ஆகும்\
 
இந்த நிலையில்  உதயநிதி தற்போது திமுக இளைஞர் அணியில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய பிரிவை உருவாக்க முடிவு செய்துள்ளார். இந்த பேரவையில் கல்லூரி பெண்கள் உள்பட இளம்பெண்களை சேர்க்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அதிமுகவில் இளம்பெண்கள் பாசறை உள்ள நிலையில் திமுகவிலும் அது போன்ற அமைப்பை உருவாக்க அவர் எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்