அரசியலமைப்பையே மாற்ற பாத்தாங்க.. ஆட்சியமைக்க முடியாம உக்காந்திருக்காங்க! – பாஜக தோல்வி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Prasanth Karthick

செவ்வாய், 4 ஜூன் 2024 (19:42 IST)
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் போனது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.



இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 235 தொகுதிகளிலும், மற்றவை 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் காங்கிரஸின் வெற்றி குறித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “இந்தியா கூட்டணியின் இந்த வெற்றியை கலைஞர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன். இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி. பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகங்கள், ஊடக பரப்புரை என அனைத்தையும் உடைத்து தவிடுபொடியாக்கி நாம் பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றி. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமைந்துள்ளது.

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை தொடுத்தனர். அதிகாரம் கையில் இருப்பதால் அரசியலமைப்பையே மாற்ற முயன்றனர். ஆனால் இப்போது அரசு அமைக்கவே பெரும்பான்மையை தொட கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்