நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்: முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து?

Mahendran

வெள்ளி, 31 மே 2024 (14:01 IST)
இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
நாளையுடன் பாராளுமன்ற தேர்தல் முடிவடையும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பதும் அன்றைய இரவுக்குள் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி என்ற ஒரு கூட்டணியை அமைத்துள்ள நிலையில் அந்த கூட்டணியின் தலைவர்கள் நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்றும் அதில் பிரதமர் வேட்பாளர் உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக திமுக சார்பில் டி ஆர் பாலு பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்