முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்த - நடிகர் அர்ஜுன்!

J.Durai

திங்கள், 27 மே 2024 (11:21 IST)
அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யாவின் நடிகர் அர்ஜுன் மகளுக்கும் குணசித்ர நடிகர் தம்பி ராமைய்யா மகனுக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமண அழைப்பிதழை பிரபலங்களை நேரில் சந்தித்து வழங்க அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.
 
செம கலர்ஃபுல்லாக ராயல் வெட்டிங் போல நடைபெற்ற அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டானது. பர்மாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 5 காரட் மாணிக்க மோதிரத்தைத் தான் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அணிவித்தார் என்றும் அர்ஜுன் அனைத்தையும் பார்த்து பார்த்து தனது மகளுக்காக செய்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.
 
மாப்பிள்ளை உமாபதிக்கு தங்கம், வைரம் கலந்த மோதிரமும் அதன் மத்தியில் குட்டியா ஒரு மாணிக்க கல்லும் பொறிக்கப்பட்டு இருந்தது.இருவரின் ஆடைகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்தும் பிங்க் நிறத்தில் அட்டகாசமாக இருந்தது. நிச்சயதார்த்தத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு தங்கத்தட்டில் பல மாநிலங்களை சேர்ந்த சிறப்பான உணவு வகைகளை விருந்தினர்களுக்கு கொடுத்து அசத்தினர்.நடிகர் விஷால், இயக்குநர் ஏ.எல். விஜய், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றனர்.
 
வரும் ஜூன் 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.
 
தனது மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் வைக்கும் பணியை ஆரம்பித்துள்ள நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.தம்பி ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் உடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
 
ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதியின் திருமண அழைப்பிதழ் ஒரு பெட்டி போல இருக்கிறது.அதனை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நடிகர் அர்ஜுன் கொடுக்கும் காட்சி வெளியாகி இருக்கிறது. அர்ஜுன், அர்ஜுன் மனைவி நிவேதிதா, தம்பி ராமைய்யா மற்றும் அவரது மனைவி பொன்னழகு உள்ளிட்டோர் மு.க. ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து திருமணத்திற்கு வந்து மணமக்களை ஆசிர்வதிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், 
 
விஜய், அஜித், சூர்யா என பல நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்க அர்ஜுன் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்