முல்லை பெரியாறு குறுக்கே புதிய அணை.. கேரளாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Prasanth Karthick

வெள்ளி, 24 மே 2024 (18:11 IST)
முல்லை பெரியாறு அணைக்கு குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள அரசு பேசி வரும் நிலையில் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு சமீபமாக தீர்க்கமாக அறிவித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் கேரள அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு குறுக்கே புதிய அணை கட்டும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் “உச்சநீதிமன்ற உத்தரவை மீறி முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். சூழலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கேரள கம்யூனிச கட்சியும், திமுகவும் இந்தியா கூட்டணியில் உள்ள நிலையில் இந்த அணை விவகாரம் கூட்டணிக்குள்ளும் பல்வேறு புகைச்சல்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்