முடிந்தது போராட்டம்; பணிக்கு திரும்பும் மருத்துவர்கள்!

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (17:45 IST)
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வந்த மருத்துவர்கள் இன்று போராட்டத்தை கைவிட்டு தங்கள் பணிகளுக்கு திரும்பினர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியிறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் மருத்துவ சேவை கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மருத்துவ சங்கங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பவில்லையெனில் அவர்களுக்கு பதிலாக வேறு மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். மேலும் மருத்துவர் பணி கடவுளுக்கு நிகரான பணி. பணமற்ற ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டியது மருத்துவர்களின் கடமை என்று கூறினார்.

முதலமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்கி மருத்துவர்கள் பலர் போராட்டத்தை கைவிட்டு வழக்கம்போல மருத்துவ பணிகளை தொடங்கியிருக்கின்றனர். இதுவரை 2160 மருத்துவர்கள் பணிகளுக்கு திரும்பி இருப்பதாகவும், இன்னும் 2523 மருத்துவர்கள் மட்டுமே போராடி வருவதாகவும் அவர்களும் விரைவில் பணிகளுக்கு திரும்புவர் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்