மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால்…? – முதலமைச்சர் எச்சரிக்கை!

வியாழன், 31 அக்டோபர் 2019 (13:15 IST)
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்களுடைய இடம் காலியானதாக அறிவிக்கப்படும் என எச்சரித்துள்ளார் தமிழக முதல்வர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் பலர் மருத்துவம் பார்க்க இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தால் பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் அமைப்போடு பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்க அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் இன்று மருத்துவர்கள் தங்கள் பணிகளுக்கு திரும்பவில்லையென்றால் அவர்களுடைய இடம் காலியானதாக அறிவிக்கப்படும். இன்று மாலைக்குள் அந்த இடத்திற்கு வேறொரு மருத்துவர் நியமிக்கப்படுவார் என எச்சரித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், அந்தப் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு மாற்று மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். #TNGovt

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 31, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்