2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

Mahendran

திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (17:29 IST)
சிங்கப்பூரை சேர்ந்த 49 வயது வைத்திலிங்கம் என்பவர், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து, இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் முதல் மனைவியிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இரண்டாவது மனைவி மனிதவளத்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளார்.
 
ஏற்கனவே திருமணம் ஆன வைத்திலிங்கம், தனது முதல் மனைவியிடமிருந்து தனது இரண்டாவது திருமணத்தை மறைத்து வைத்திருந்தார். இந்த நிலையில், அவரது இரண்டாவது மனைவி கர்ப்பமாகி, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையுடன் மருத்துவமனை அறையில் இருந்து வெளியே வந்தபோது, தற்செயலாக முதல் மனைவியை அங்கு பார்த்ததால் வைத்திலிங்கத்தின் ரகசியம் வெளிச்சத்திற்கு வந்தது. இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் இருந்த இந்த ரகசியம் வெளியானதை அடுத்து, அவர் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
 
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், தன்னை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டதால், இரண்டாவது மனைவி வைத்திலிங்கம் மீது மனிதவளத்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம், சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்