அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்த கோரி கடந்த 25 ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இன்றுடன் 7 ஆவது நாளாக போராட்டம் நடைபெறும் நிலையில் 1,550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தமிழக முதல்வர் பழனிசாமியும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் பணிக்கு திரும்பிய மருத்துவர்கள் சிலரை பணி இடமாற்றம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது. மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தும் சுமார் 650 மருத்துவர்கள் நாளை முதல் பிரேத பரிசோதனை செய்யமாட்டோம் என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.