’ஊரடங்கு 5.0’- தமிழக முதல்வரை சந்திக்கும் மருத்துவர் குழு!

Webdunia
திங்கள், 25 மே 2020 (15:31 IST)
தமிழகத்தில் ஊரடங்கு மே 31 ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள மருத்துவர்க் குழு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளது.

இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31 ஆம் தேதி வரையிலான நான்காவது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தினசரி 700 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய தமிழக எண்ணிக்கை 16,000 ஐ தாண்டியுள்ளது.

இதனால் மே 31 ஆம் தேதிக்குப் பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஐசிஎம்ஆர் துணைத் தலைவர் பிரதீப் கவூர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது. மேலும் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்பதும் விவாதிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்