சிகிச்சைக்கு வரும் பெண்களை ஆபாச படம் எடுத்த மருத்துவர் - சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (16:25 IST)
சிகிச்சைக்கு வரும் பெண்களை மருத்துவர் ரகசிய கேமரா வழியாக ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்த விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை மயிலாப்பூரில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சிவகுருநாதன். இவரிடம் அப்பகுதியில் உள்ள பலரும் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.
 
அந்நிலையில், திருவள்ளூர், மேட்டுக்கடையை சேர்ந்த பிராங்கிளின்(35) என்பவரின் மனைவி அம்மு(29) ஆகியோர் சமீபத்தில் மயிலாப்பூர் வந்தனர். அப்போது அம்முவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அம்முவின் தாயின் பரிந்துரை காரணமாக மருத்துவர் சிவகுருநாதனை பார்க்க நேற்று மாலை 7  மணியளவில் கணவனும், மனைவியும் சென்றுள்ளனர்.
 
அப்போது, பிராங்கிளினை வெளியே காத்திருக்க சொன்ன சிவகுருநாதன், மறைத்து வைத்த கேமரா மூலம் அம்முவை சோதிப்பது போல் ஆபசமாக படம் பிடித்துள்ளார். அப்போது, அறைக்குள் நுழைந்த பிராங்கிளின் இதை பார்த்துவிட்டார். எனவே, இதுபற்றி அவர் சிவகுருநாதனிடம் கோபமாக கேட்க, அம்முவும் சுதாரித்தார். விபரீதத்தை உணர்ந்த குருநாதன் உடனடியாக அந்த புகைப்படங்களை அழித்துவிட்டார். மேலும், மெமரி கார்டையும் எடுத்து வெளியே வீசி விட்டார். 
 
அதன் பின், அவரிடமிருந்த செல்போனை பறித்து சோதனை செய்ததில், அதில் சிகிச்சைக்காக வந்த பெண்களை ஆபாச கோணத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தது தெரியவந்தது. எனவே, அவரை பொதுமக்கள் பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
சில மாதங்களுக்கு படம் எடுத்து ஒரு பெண்ணிடம் அவர் அடி வாங்கியுள்ளார். ஆனால், போலீசாரிடம் யாரும் புகார் கொடுக்கவில்லை. எனவே, துணிந்து இந்த தவறை அவர் தொடர்ந்து செய்து வந்துள்ளார். அவர் மீது பெண் வன்கொடுமை, மற்றவர் அனுமதியின்றி ஆபாச படம் பிடித்தல் ஆகிய வழக்குகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்