நாளை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் டாக்டர் மகேந்திரன்?

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (19:17 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுகவை அடுத்து மூன்றாவது அணியாக போட்டியிட்டது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆகும். இந்த கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது என்பதும் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேர்தலுக்கு பின் டாக்டர் மகேந்திரன் உட்பட பலர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி டாக்டர் மகேந்திரன் நாளை திமுகவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது
 
திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் முன்னிலையில் நாளை டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைய இருப்பதாகவும் அவருடன் கோவை மாவட்டத்தில் அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் திமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்