திமுக எதிரிகட்சியாக செயல்படாது: ஸ்டாலின் பேச்சு!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (12:32 IST)
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் பதவியேற்றுக் கொண்டனர்.


 
 
சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட தனபாலை தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். அப்போது பேசிய அவர் திமுக சார்பாக புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
 
சபாநாயகர் கட்சி சார்பின்றி செயல்பட வேண்டும் எனவும் நூற்றாண்டு காண உள்ள இந்த அவையின் எதிர்கட்சித் தலைவராக இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் அவையில் திமுக எதிர்கட்சியாக மட்டுமே செயல்படும் என்றும், எதிரிகட்சியாக அல்ல என்றும் தெரிவித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்