கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காணொலி மூலம் திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டம்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 16,000 ஆக உள்ளது. தற்போது கொரோனா பரவலும் அதிகரித்து இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காணொலி மூலம் திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெருவாரியாக வெற்றி பெற்ற நிலையில் இப்போது அதே போல வெற்றி பெற தீவிர நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.