ரூ.100 கோடி கொடுங்க.. பாஜகவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பிய திமுக!!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (16:02 IST)
திமுக குறித்து தவறான செய்தியை பாஜக தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டதாக நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்புக்கு உதவ திமுக நிதியாக எதையும் செய்யவில்லை என பாஜக அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டதாக தெரிகிறது. இது முற்றிலும் தவறான பதிவு என கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
உண்மையில் திமுக, கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.  
 
இதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் திமுக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் முகக்கவசங்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு தங்களது நாடாளுமன்ற அல்ல சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் குற்பிட்டுள்ளார். 
 
இதனை கட்சியினர் செய்துள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. அதோடு நேற்று, திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்ட்டாக மாற்றிகொள்ளலாம் என தனது விருப்பத்தை அரசுக்கு முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்