திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம் திமுகவினர் கவலை

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:53 IST)
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 94 வயதான நிலையில் வயது மூப்பு காரணமாக சமீபத்தில் அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. இந்த நிலையில் அன்பழகன் அவர்களுக்கு சமீபத்தில் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் அன்பழகன் அவர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளதால் திமுகவினர் பெரும் கவலை அடைந்துள்ளனர் 
 
மேலும் அன்பழகன் உடல்நிலையை கருத்தில் கொண்டு மார்ச் 1ஆம் தேதி தான் பிறந்த நாள் கொண்டாட போவதில்லை என்றும் எனவே தனக்கு யாரும் பிறந்தநாள் வாழ்த்து கூற நேரில் வர வேண்டாம் என்றும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்