முதல்வர் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (11:13 IST)
தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அதன் இரண்டாம் பகுதி மார்ச் 10ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடத்த நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை விவகாரம், இந்தி திணிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை திமுக முன்வைக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும். அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்