ஆளுநருக்கு எதிராக தீர்மானம் உள்பட திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (12:04 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தினார். 
 
இதனை அடுத்து இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் பின்வருவன:
 
* மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து  நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்
 
* தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம்
 
* எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதற்கு கண்டனம்
 
* தமிழை புறக்கணித்து சமஸ்கிருதம், இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு
 
* பொது விநியோக திட்டத்தின் கீழ் கோதுமை, பருப்பு போன்ற பொருட்களுக்கு மானியம் குறைப்பு
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்